Wednesday, August 4, 2010

Micro to Nano மைக்ரோவிலிருந்து நேனோ வரை

மைக்ரோவிலிருந்து நேனோ வரை

இதுவரை மைக்ரோபிராசசர், மைக்ரோபிளிம், மைக்ரோசாப்ட் என்று பலவிதமான நுண்பொருள்களைப் பற்றி அறிந்திருந்தோம். தற்போது நுண்ணிய பொருள்களை விடவும் மிகநுண்ணிய பொருள்களை உருவாக்குகிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை நேனோ டெக்னாலஜி (Nano Technology) என்றழைக்கிறார்கள். TATA’s Nano Car டாடாவின் நேனோ கார் இந்தத் தொழில்நுட்பத்தில் உருவானது அல்ல.

இந்தத் தலைமுறையின் புதிய வரவாக இந்த நேனோ டெக்னாலஜி உள்ளது. இதை முன் கூட்டியே அறிந்தோ என்னவோ நம் முன்னோர்கள் அதை பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டினேன்

கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குருகத்தரித்த குறள்.

இந்தத் நேனோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முள்ளு முனையிலே மூன்று குளம் என்ன அதற்கு மேலேயும் வெட்டிடலாம். அதில் நேனோ மீன்களை வளர்த்து அந்த மீன்களை நேனோ படகில் போய் நேனோ வலைவீசி பிடிக்கலாம்.

ஆனால் இவற்றை எல்லாம் நாம் வெறும் கண்களால் பார்க்க இயலாது. எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலமாக தான் பார்க்க முடியும். அந்த அளவு மிக மிகச் சிறியவை.

தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் (H2O) இனைந்த மூலக்கூறு (Molecule). அதுபோல கார்பனுடன் மற்ற அணுக்கள் இனைந்த மூலக்கூறுகளைக் கொண்டு புதிய நேனோ கருவிகளை உருவாக்குகிறார்கள். ஒரு நேனோ ரோபோ (Robot) இரத்தக் குழாயில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு அடைப்பை நீக்குவதற்கோ அல்லது புற்றுநோய் கட்டியை வெட்டி எடுப்பதற்கோ பயன்படுத்தலாம்.

இந்த நேனோ டெக்னாலஜி சார்ந்த படிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்கலைக்கழகங்களிலும் சில கல்லூரிகளிலும் இதை பயிற்றுவிக்க தொடங்கியுள்ளார்கள். இந்த நேனோ டெக்னாலஜியும் இதனுடன் இனைந்த ஜெனிடிக் என்ஜினியரிங் (Genetic Engineering) தொழில்நுட்பமும் எதிர்காலத்தில் இன்றியமையாததாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

No comments:

Post a Comment