Wednesday, August 11, 2010

குரோமோசோம் என்ற தலைவிதி

உயிரினங்கள் அனைத்திலும் இனிப்பு, காரம், உப்பு என்ற மசாலா கலவை உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் அளவு வேறுபடும் அவ்வளவு தான். இந்த கெமிஸ்டிரி காதலிப்பவர்கள் பயன்படுத்தும் அந்த கெமிஸ்டிரி தான்.
ஒவ்வொறு உயிரணுவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குரோமோசோம்கள் உள்ளன. இது மனித இனத்தின் உயிரணுவில் 22 குரோமோசோம்கள் ஒன்றை ஒன்று ஒத்த ஜோடியாகவும், 1 ஜோடி குரோமோசோம்கள் ஆண், பெண் X,Y அல்லது ஆண், ஆண் X,X அல்லது பெண், பெண் Y,Y என்ற ஜோடியாகவும் உள்ளது. மொத்தமுள்ள 23 குரோமோசோம்களில் 22ல் மனிதனுடைய மற்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது.  ஒருவரின் உயரம், (தோல், முடி, கண்விழி ஆகியவற்றின்) நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி இதுபோன்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது. அந்த 23வது 1 ஜோடி குரோமோசோமில் ஆண், பெண் அல்லது ஆண், ஆண் அல்லது பெண், பெண் என்ற பாலின குணங்கள் பதிவாகி உள்ளது. உதாரணமாக, குரோமோசோம் 15ல் தோல் நிறம்  SLC24A5  கண்விழி நிறம்  15q11-q15 குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோமோசோமில் உள்ள  டிஎன்ஏ DNAல் அடினின் adenine(A), தைமின் thymine (T), குவானின் guanine (G) சைடோசின் cytosine (C) ரசாயன கலவைகள் உள்ளது. இவற்றை குறிக்கும் AT / GC என்ற குறியீடுகளைத் தான் எழுத்து என்று குறிப்பிடுகிறேன். இத்தகைய எழுத்து மொத்தம் 3,079,843,747 மனித உயிரணுவில் உள்ளது இதுதான் தலையெழுத்து அல்லது தலைவிதி. நம் தலைவிதி AT / GC என்ற 1000 எழுத்துகளைக் கொண்ட 1000 பக்கங்கள் உள்ள 3300 புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நூலகத்தை உள்ளடக்கிய மனித கருமுட்டை கடுகு அளவு இல்லை அதை விடவும் மிகச்சிறியது.
கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குருகத்தரித்த குறள்.  இந்த தலைவிதியை என்ன சொல்ல.
இப்போது சிந்தியுங்கள் எத்தனை வல்லமை படைத்த இறைவன் இதை படைத்திருப்பான்.
மேலும், எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இருகால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு( கால் )களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.       ( ூரத்துந் நூர், வசனம் - 45 .       24:45)
நிச்சயமாக நாம் ( ஆதி ) மனிதரைக் களிமண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். ( ஸூரத்துல் முஃமினூன், வசனம் - 12.        23:12)
 இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான்- ( கர்ப்பக் கோளறையில் ) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. ( ஸூரத்துந் நஜ்ம், வசனம் - 45, 46.       53:45,46)

No comments:

Post a Comment