Thursday, August 5, 2010

சிந்திக்க வேண்டாமா? Don't you Think?

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது

மானிடராய் பிறந்த காலையின்

கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது -  ஔவையார் பாடல்

கூன் குருடு செவிடு இல்லாமல் பிறந்த நாம் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

உங்களின் சிந்தனை ஓட்டம் புத்தகங்கள் படிப்பதிலோ, மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதிலோ இருக்கலாம். ஆனால் இன்டர்னெட் என்ற மாபெறும் நூலகத்தில் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அதை விட்டு விட்டு வீண் பொழுதுபோக்கு விசயங்களில் மூழ்கி விடாதீர்கள்.

குர்ஆனை என்றும் சிறிதளவாவது ஓத முயற்சி செய்யுங்கள்.
அல்குர்ஆன் ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக, வானவியல் (Astronomy), மருத்துவம் (Medicine), புவியியல் (Geography), இயற்பியல் (Physics), வேதியல் (Chemisty), விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), உயிரியல் (Biology), கருவியல் (Embryology), சமுத்திரவியல் (Oceanography), மண்ணியல் (Geology) உட்பட அனைத்து துறைகளைப் பற்றியும் மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் பேசுகின்றது. ஒவ்வொரு துறையைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடும் போதும் ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்கள், மாமேதைகள் குறிப்பிடுவதை விட மிக அழகாகவும், துள்ளியமாகவும் பேசுகின்றது.

மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (18:7).

இந்த உலகத்தில் இன்பம் என்று எதை நினைக்கின்றோமோ அவையெல்லாம் அற்ப இன்பங்களாகவே இருக்கின்றன. எவையெல்லாம் சுகம் என்று நினைக்கின்றோமோ அவையெல்லாம் மாயையாகத்தான் இருக்கின்றன. அவர்களின் சிந்தனையை பொருத்து அவைகள் அமைகின்றன.

இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? (4:82)

என்று குர்ஆனில் அல்லாஹ் கேட்கும் கேள்விக்கு நம்முடைய பதில்தான் என்ன?

அறிவுடையோரே! அறிவுடைய மக்களே! சிந்திக்க வேண்டாமா?

No comments:

Post a Comment