Friday, November 26, 2010

நீர் அடித்து நீர் விலகாது?

நீர் அடித்து நீர் விலகாது என்பது ஒரு பழமொழி, இது சில குணாதிசயங்களைக் குறிப்பிட பயன்படுகிறது.

ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், தண்ணீரால் அடித்தால் தண்ணீர் என்ன, எத்தகைய பொருளும் விலகிவிடும்.

தண்ணீர்பீச்சான் (waterjet) என்ற கருவியைக்கொண்டு பீச்சி அடிக்கப்படுகின்ற தண்ணீர் மிகவும் கடினமான உலோகத்தைக்கூட துளைத்துவிடும். ஒன்றரை அடி (45 செ.மீ) அளவு தடிமனான பொருளைக்கூட துளைத்துவிடும்.

What is a matter?

அது இது எது? What is a matter?

அது என்ன? என்ன அது? என்ன அது = என்னது? ...

என்னது? தலைசுற்றுகிறதா?!!

நான் அது என்ற அதைப்பற்றித்தான் பேசுகிறேன்.

அதுவாகி, அவனளாய் எல்லாம் ஆகி,
அடி நடுவு முடிவாகி,
அகண்டமாகி, பொதுவாகி,
பல்லுயிர்களனைத்துக் கெல்லாம் புகலிடமாய்
எப்பொருட்கும் மூலமாகி, ...

இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்ற அது எதுவாக இருக்கும்?.

எந்த ஒரு பொருளுக்கும் நம்மால் உணரக்கூடிய திட, திரவ, வாயு என்ற மூன்று நிலையைக் கடந்த நான்காம் நிலையே அது என்று குறிப்பிடப்படுகின்றது. அதை பிளாஸ்மா (Plasma) என்ற ஒளிர்வு நிலை, ஈர்ப்பு, ஆத்மா, உயிர் என்று எப்படியும் அழைக்கலாம். அது இல்லாமல் எதுவுமே இல்லை.