Wednesday, August 11, 2010

குரோமோசோம் என்ற தலைவிதி

உயிரினங்கள் அனைத்திலும் இனிப்பு, காரம், உப்பு என்ற மசாலா கலவை உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் அளவு வேறுபடும் அவ்வளவு தான். இந்த கெமிஸ்டிரி காதலிப்பவர்கள் பயன்படுத்தும் அந்த கெமிஸ்டிரி தான்.
ஒவ்வொறு உயிரணுவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குரோமோசோம்கள் உள்ளன. இது மனித இனத்தின் உயிரணுவில் 22 குரோமோசோம்கள் ஒன்றை ஒன்று ஒத்த ஜோடியாகவும், 1 ஜோடி குரோமோசோம்கள் ஆண், பெண் X,Y அல்லது ஆண், ஆண் X,X அல்லது பெண், பெண் Y,Y என்ற ஜோடியாகவும் உள்ளது. மொத்தமுள்ள 23 குரோமோசோம்களில் 22ல் மனிதனுடைய மற்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது.  ஒருவரின் உயரம், (தோல், முடி, கண்விழி ஆகியவற்றின்) நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி இதுபோன்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது. அந்த 23வது 1 ஜோடி குரோமோசோமில் ஆண், பெண் அல்லது ஆண், ஆண் அல்லது பெண், பெண் என்ற பாலின குணங்கள் பதிவாகி உள்ளது. உதாரணமாக, குரோமோசோம் 15ல் தோல் நிறம்  SLC24A5  கண்விழி நிறம்  15q11-q15 குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோமோசோமில் உள்ள  டிஎன்ஏ DNAல் அடினின் adenine(A), தைமின் thymine (T), குவானின் guanine (G) சைடோசின் cytosine (C) ரசாயன கலவைகள் உள்ளது. இவற்றை குறிக்கும் AT / GC என்ற குறியீடுகளைத் தான் எழுத்து என்று குறிப்பிடுகிறேன். இத்தகைய எழுத்து மொத்தம் 3,079,843,747 மனித உயிரணுவில் உள்ளது இதுதான் தலையெழுத்து அல்லது தலைவிதி. நம் தலைவிதி AT / GC என்ற 1000 எழுத்துகளைக் கொண்ட 1000 பக்கங்கள் உள்ள 3300 புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நூலகத்தை உள்ளடக்கிய மனித கருமுட்டை கடுகு அளவு இல்லை அதை விடவும் மிகச்சிறியது.
கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குருகத்தரித்த குறள்.  இந்த தலைவிதியை என்ன சொல்ல.
இப்போது சிந்தியுங்கள் எத்தனை வல்லமை படைத்த இறைவன் இதை படைத்திருப்பான்.
மேலும், எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இருகால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு( கால் )களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.       ( ூரத்துந் நூர், வசனம் - 45 .       24:45)
நிச்சயமாக நாம் ( ஆதி ) மனிதரைக் களிமண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். ( ஸூரத்துல் முஃமினூன், வசனம் - 12.        23:12)
 இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான்- ( கர்ப்பக் கோளறையில் ) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. ( ஸூரத்துந் நஜ்ம், வசனம் - 45, 46.       53:45,46)

Thursday, August 5, 2010

விர்சுவல் என்ற மாயை

இதை இருக்கிறது என்பதா அல்லது இல்லை என்பதா, ம் கூம் இல்லாமல்(ஆனால்)இருக்கிறது என்பது தான் சரி.

இல்லாமல்(ஆனால்)இருந்தது
இல்லாமல்(ஆனால்)இருக்கிறது
இல்லாமல்(ஆனால்)இருக்கும்

இந்த முன்று நிலைகளும் அனைத்தையும் படைத்து காத்து வருகிற ஏக இறைவனுக்கு பொருந்தும்.

உயிர் எங்கே இருக்கிறது, மனது எங்கே இருக்கிறது, நினைவு எங்கே இருக்கிறது. இது எல்லாம் விர்சுவல் என்ற மாயை தான்.

இந்த நவீன காலத்தில் மனிதன் உறுவாக்கிய விர்சுவலிடி பலவிதங்களில் பயன்படுகிறது. ஜாவா விர்சுவல் மெஷின், விர்சுவல் மெமோரி, விர்சுவல் கீபோர்ட், விர்சுவலைஜேஷன் மற்றம் பல கணினியுகத்தில் உபயோகமாகிறது.

நேனோவின் அளவு

1 மீட்டர் = 1000 மில்லிமீட்டர், 1 மில்லிமீட்டர் = 1000 மைக்ரோமீட்டர்,
1 மைக்ரோமீட்டர் = 1000 நேனோமீட்டர்,
1 மீட்டர் 1,000,000,000 நேனோமீட்டர் அல்லது மில்லிமைக்ரான்
1 மில்லிமீட்டர் = 1,000,000 நேனோமீட்டர்

ஒரு கடுகின் அளவு 1 மில்லிமீட்டர் என்றால் அதை 10 லட்சம் பகுதியாக பிரித்தால் வருகின்ற அளவு 1 நேனோ.

இதைவிடவும் சிறிய அளவான பிகோ (1 மீட்டர் = 1,000,000,000,000  pico பிகோமீட்டர் ) 1×10−12 m, or as 1 E−12 அணுக்களின் அளவை குறிப்பிட பயன்படுகிறது.

சிந்திக்க வேண்டாமா? Don't you Think?

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது

மானிடராய் பிறந்த காலையின்

கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது -  ஔவையார் பாடல்

கூன் குருடு செவிடு இல்லாமல் பிறந்த நாம் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

உங்களின் சிந்தனை ஓட்டம் புத்தகங்கள் படிப்பதிலோ, மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதிலோ இருக்கலாம். ஆனால் இன்டர்னெட் என்ற மாபெறும் நூலகத்தில் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அதை விட்டு விட்டு வீண் பொழுதுபோக்கு விசயங்களில் மூழ்கி விடாதீர்கள்.

குர்ஆனை என்றும் சிறிதளவாவது ஓத முயற்சி செய்யுங்கள்.
அல்குர்ஆன் ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக, வானவியல் (Astronomy), மருத்துவம் (Medicine), புவியியல் (Geography), இயற்பியல் (Physics), வேதியல் (Chemisty), விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), உயிரியல் (Biology), கருவியல் (Embryology), சமுத்திரவியல் (Oceanography), மண்ணியல் (Geology) உட்பட அனைத்து துறைகளைப் பற்றியும் மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் பேசுகின்றது. ஒவ்வொரு துறையைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடும் போதும் ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்கள், மாமேதைகள் குறிப்பிடுவதை விட மிக அழகாகவும், துள்ளியமாகவும் பேசுகின்றது.

மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (18:7).

இந்த உலகத்தில் இன்பம் என்று எதை நினைக்கின்றோமோ அவையெல்லாம் அற்ப இன்பங்களாகவே இருக்கின்றன. எவையெல்லாம் சுகம் என்று நினைக்கின்றோமோ அவையெல்லாம் மாயையாகத்தான் இருக்கின்றன. அவர்களின் சிந்தனையை பொருத்து அவைகள் அமைகின்றன.

இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? (4:82)

என்று குர்ஆனில் அல்லாஹ் கேட்கும் கேள்விக்கு நம்முடைய பதில்தான் என்ன?

அறிவுடையோரே! அறிவுடைய மக்களே! சிந்திக்க வேண்டாமா?

Wednesday, August 4, 2010

Micro to Nano மைக்ரோவிலிருந்து நேனோ வரை

மைக்ரோவிலிருந்து நேனோ வரை

இதுவரை மைக்ரோபிராசசர், மைக்ரோபிளிம், மைக்ரோசாப்ட் என்று பலவிதமான நுண்பொருள்களைப் பற்றி அறிந்திருந்தோம். தற்போது நுண்ணிய பொருள்களை விடவும் மிகநுண்ணிய பொருள்களை உருவாக்குகிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை நேனோ டெக்னாலஜி (Nano Technology) என்றழைக்கிறார்கள். TATA’s Nano Car டாடாவின் நேனோ கார் இந்தத் தொழில்நுட்பத்தில் உருவானது அல்ல.

இந்தத் தலைமுறையின் புதிய வரவாக இந்த நேனோ டெக்னாலஜி உள்ளது. இதை முன் கூட்டியே அறிந்தோ என்னவோ நம் முன்னோர்கள் அதை பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டினேன்

கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குருகத்தரித்த குறள்.

இந்தத் நேனோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முள்ளு முனையிலே மூன்று குளம் என்ன அதற்கு மேலேயும் வெட்டிடலாம். அதில் நேனோ மீன்களை வளர்த்து அந்த மீன்களை நேனோ படகில் போய் நேனோ வலைவீசி பிடிக்கலாம்.

ஆனால் இவற்றை எல்லாம் நாம் வெறும் கண்களால் பார்க்க இயலாது. எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலமாக தான் பார்க்க முடியும். அந்த அளவு மிக மிகச் சிறியவை.

தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் (H2O) இனைந்த மூலக்கூறு (Molecule). அதுபோல கார்பனுடன் மற்ற அணுக்கள் இனைந்த மூலக்கூறுகளைக் கொண்டு புதிய நேனோ கருவிகளை உருவாக்குகிறார்கள். ஒரு நேனோ ரோபோ (Robot) இரத்தக் குழாயில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு அடைப்பை நீக்குவதற்கோ அல்லது புற்றுநோய் கட்டியை வெட்டி எடுப்பதற்கோ பயன்படுத்தலாம்.

இந்த நேனோ டெக்னாலஜி சார்ந்த படிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்கலைக்கழகங்களிலும் சில கல்லூரிகளிலும் இதை பயிற்றுவிக்க தொடங்கியுள்ளார்கள். இந்த நேனோ டெக்னாலஜியும் இதனுடன் இனைந்த ஜெனிடிக் என்ஜினியரிங் (Genetic Engineering) தொழில்நுட்பமும் எதிர்காலத்தில் இன்றியமையாததாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

Tuesday, August 3, 2010

Tamil Genetics தமிழ் ஜெனிடிக்ஸ்

தமிழ் ஜெனிடிக்ஸ்

உலகின் முதல் குடிமகன் ஆதம் நிச்சயமாக ஒரு திராவிட தமிழர் தான்.

ஆதி காலம் முதல் மனித சமுகம் பல வளர்ச்சியை கண்டுள்ளது. வணக்க வழிபாட்டு முறையும் வாழ்க்கைத் தரமும் தான் மாறி உள்ளது. ஆனால் நாம் அனைவரும் ஆதமின் சமுகத்தினர் தான் அதிலும் தமிழ் திராவிடர்களாகிய நம்முடைய ஜீன்களும் (Genes) குரோமோசோமும் (Chromosome) அதை நிரூபிக்கும்.